Sunday, 15 September 2013

மருத்துவ குணம் மிகுந்த நாவல் பழம்

மருத்துவ குணம் மிகுந்த நாவல் பழம் பின்வரும் நோய்களை குணப்படுத்தும் ஆற்றல் உடையது சர்க்கரை நோய் . மூல நோய். வாய்ப்புண், அஜுரணக் கோளாறுகள். இது தவிர ரத்தத்தைச் சுத்திகரிப்பதோடு இரும்பு சத்து அதிகரிக்கவும்
உதவுகிறது . துாக்கமின்றி அவதிப்படுபவர்கள் மதிய உணவுக்குப் பின்பு தொடர்ந்து நாவல் பழங்களைச் சாப்பிட்டு வந்தால் நல்ல துாக்கம் கிடைக்குமாம் . சருமத்தைப் பாதுகாக்கவும் உடல் சூட்டை தணித்து பித்தத்தைப் போக்கவும் ஞாபக சக்தியை அதிகரிக்கவும் நாவல் பழம் உதவுகிறது.

Saturday, 14 September 2013

மனிதனுக்கு அதிக தொல்லை கொடுக்கும் உறுப்பு எது?

மனிதனுக்கு அதிக தொல்லை கொடுக்கும் உறுப்பு எது என்ற கேள்விக்கு நாக்கு என்று பதில் சொல்லப்பட்டுள்ளது யோக சாரத்தில். அதே யோக சாரம் மிகத் தீய குணமாக கோபத்தையும் சுட்டிக் காட்டியுள்ளது. கோபம் உள்ளவனால் தெளிவாக சிந்திக்க முடியாது. தெளிவற்ற மனதில் உண்மைகள் புலப்படுவதில்லை.

Friday, 13 September 2013

ஓம்கார தியானம்

தினமும் பத்துநிமிடம் ஓம்காரதியானம் செய்வதால் *அறிவுத்திறன் அதிகரிக்கும் *சட்டென்று சரியான முடிவுகளை எடுக்கும் ஆற்றல் அதிகரிக்கும் *உடலில் உள்ள மின்சார ஆற்றலை அதிகரிக்கும் *உள்ளுறுப்புகளின் ஆற்றல் அதிகரிக்கும் *இரத்தஅழுத்தம் குறையும இது போன்ற பல்வோறு பலன்களை ஆராய்ந்து நிருபித்திருக்கிறார்கள்.

கஞ்சி!

ஏழைக்கு வயிற்றை நிரப்பவும் பணக்காரனுக்கு கொழுப்பை கரைக்கவும் பயன்படுகிறது.

சாதாரண விவசாயி!

ஒரு மரம் நட்டு முடிப்பதற்குள் மயக்கமே வந்துவிடுகிறது... உழுது, இதனை பயிர்களை நட்டு, உரமிட்டு,தண்ணீர் பாயிச்சி, விளைத்த பயிர்களை அறுவடை செய்து நிமிடம் சேர்கிறான் உழவன்.
இதனை பெரிய விடயங்களை செய்கிறான் ஆனால் அவனை பற்றி கூறுகையில் சாதாரண விவசாயி என்று ஏளனமாக கூறுகிறோம். ஒரு நாள் உழவனாக வாழ்தந்து பார், அவனின் உழைப்பு புரியும், அவன் மேல் உள்ள மரியாதையும் வளரும்